இலங்கைக்கு 146 வகையான மருந்துகள் இறக்குமதி!
நாட்டில் பற்றாக்குறையாகவுள்ள 146 வகையான மருந்துகள் இந்தியக் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளில் தற்போது 12 வகையான மருந்துகளுக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுவதாக அதன் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார்.
தற்போது பற்றாக்குறையாக உள்ள மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் அவை நாட்டிற்குக் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே 31 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக மருத்துவர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அவற்றை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படாத நிலையில், புற்றுநோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்
இந்த நிலையில், இந்தியக் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு 146 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
