அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு தொடர்பில் விசாரணை!
அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையும் இந்த விசாரணைகளின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (15.03.2023) விசாரணையொன்றை நடத்த ஏற்பாடாகி இருந்த போதும் பிரதிவாதிகள் சமூகமாக்காத நிலையில் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் 23ஆம் திகதி மருந்து தட்டுப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விரிவான விசாரணைகள் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய, விசாரணைகளுடன் தொடர்புடைய முறைப்பாட்டாளர்களும் பிரதிவாதிகளும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மருந்துகள் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் உள்ளடக்கப்படுவதால் அதன் பற்றாக்குறை குறித்து காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
