இறக்குமதி வரி அதிகரிப்பால் விவசாயிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
உள்நாட்டு விவசாயிகள் தமது உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விளைச்சலை நியாயமான விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இறக்குமதி
இது தொடர்பில் மேலும் கூறுகையில், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் மீதான வரி விதிப்பினால் விளைச்சலை நியாயமான விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.
இந்த நாட்களில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றவற்றின் இறக்குமதி அதிகரித்தால், உள்நாட்டு விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்க நேரிடும்.
வரி அதிகரிப்பு
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு விவசாயிகளுக்கு தமது பயிர்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி 10 ரூபாவில் இருந்து 30 ரூபாவாகவும் உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாகவும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 19 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
