இலங்கையில் கோவிட் விதிமுறைகள் தொடர்பில் அதிகாரசபை எடுத்துள்ள முடிவு
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய கோவிட் நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முடிவு செய்துள்ளது.
புதிய கோவிட் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய கோவிட் நெறிமுறைகளை அறிமுகப்படுத்த அதிகாரசபை, கடந்த வெள்ளிக்கிழமையன்று நடவடிக்கை எடுத்தது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள முடிவு
எனினும் அதற்கு சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்தே இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தமது முடிவை ஒத்திவைத்துள்ளது.
இதேவேளை, இந்த வருடம் முதல் 12 நாட்களுக்குள் 37,000க்கும் அதிகமான சுற்றுலாப்
பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
