தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை சமர்ப்பிப்பு
தென் கொரிய(South Korea) ஜனாதிபதி யூன் சுக் யோல்(Yoon Suk Yeol) பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று, அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்
முன்னதாக, நேற்று இரவு ஜனாதிபதி, யோல் நாட்டில் இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து துருப்புகள் நாடாளுமன்ற கட்டிடத்தை கைப்பற்ற முனைந்தன. இதன் போது குழப்பமான சூழ்நிலையும் ஏற்பட்டது.
இராணுவ சட்டம்
இந்தநிலையில், உள்நாட்டில் எழுந்த எதிர்ப்புகளை அடுத்து, அவர் தமது அறிவிப்பை திரும்பப்பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்தே , 2022இல் இருந்து பதவியில் இருக்கும் யோல் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கோரியுள்ளது.
ஜனாதிபதி யோல் இனி நாட்டை சாதாரணமாக நடத்த முடியாது என்பது முழு நாட்டிற்கும் தெளிவாகத் தெரியவந்துள்ளது. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தென் கொரிய எதிர்க்கட்சிகள் இணைந்து, யோலை பதவி நீக்க்கும் குற்றப்பிரேரணையை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளன.
இது தொடர்பான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |