பொறுமையிழந்துள்ள இலங்கை மக்கள்! மீண்டுமொரு கறுப்பு ஜூலை குறித்து எச்சரிக்கை
நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு கருப்பு ஜூலை பதிவாகக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளித்து விட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச உதவிகள் கிடைக்கவில்லை
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள சாபம் நீங்கும். தற்போது கிணற்றுக்குள் வசிப்பது எவ்வாறு என்பதை அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.
ஆனால் மக்களின் தேவை அதுவல்ல. கிணற்றுக்குள்ளிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கு கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள போதிலும் , எவ்வித சர்வதேச உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை.
பொறுமையிழந்துள்ள மக்கள்
மக்கள் பொறுமையிழந்துள்ளனர். மதத் தலைவர்களுக்கு கூட கட்டுப்படும் நிலைமையில் அவர்கள் இல்லை. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்திலுள்ளனர்.
மக்கள் அடுத்து என்ன தீர்மானத்தை எடுப்பார்கள் என்று கூற முடியாது. அடுத்த மாதம் கருப்பு ஜூலையாக பதிவாகக் கூடிய நிலைமையே காணப்படுகிறது. இதற்கு இடமளித்து விட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களிலிருந்தும் கூட இந்த அரசாங்கம் பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆட்சியாளர்களை பதவி விலக்குவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையுடனான நட்புறவில் இல்லை. அதனை மீண்டும் புதுபிக்க வேண்டும். அதற்கான இயலுமை இந்த அரசாங்கத்திடமில்லை என்றார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
