மண்டியாவெளிகுளம் அணைக்கட்டு உடைப்பு: பல ஏக்கர் வேளாண்மை பாதிப்பு (Photo)
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி மண்டியாவெளி குளத்தின் அணைக்கட்டு உடைப்பு ஏற்பட்டதையடுத்து அந்த பகுதியிலுள்ள பல ஏக்கர் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் குளத்தின் உடைந்த அணைக்கட்டு பகுதிக்கு மண்மூடைகளை போட்டு அடைத்து வருவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் கடும் மழை பெய்துவரும் நிலையில் பல குளங்களில் நீர் நிறைந்துள்ளது.
இந்த நிலையில் தாண்டியடி பகுதியிலுள்ள குறித்த குளத்தின் அணைக்கட்டின் ஒரு பகுதி இன்று காலை உடைந்ததையடுத்து குளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் வெளியேறத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நீர்பாசன திணைக்களத்தின் சென்று உடைந்த அணைக்கட்டுக்கு மண்மூடைகள் கட்டி போட்டு பக்கோ இயந்திரத்தின் மூலம் அந்த உடைந்த பகுதியை அடைத்துள்ளனர்.
இதேவேளை இந்த அணைக்கட்டு உடைப்பினால் அந்த பகுதியிலுள்ள பல ஏக்கர் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.






இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam
