பேர்ல் கப்பலின் சிதைவுகளால் கடலோர சூழல்களுக்கு பெரும் ஆபத்து
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியாகியுள்ள உடைவுகளில் பிளாஸ்டிக் பொருட்களும் உள்ளன.
இந்த நிலையில் இவை மீன் இனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த உடைவுகள் மற்றும் சேதப்பொருட்கள் காரணமாக கடல் மற்றும் கடலோர சூழல்களுக்கு பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கப்பலில் இருந்து ரசாயனங்கள் கலந்த உடைவுகள் வெளியேறினால் அது உயிரினங்களின் இறப்புக்களுக்கு காரணமாக அமையலாம் என்பதால் கப்பல் அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ள பகுதியில் மீன்பிடி நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தலைவர் பேராசிரியர் ஏ.நவரத்னராஜா தெரிவித்துள்ளார்.