மின்சார நெருக்கடி! - வங்கிச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன.
எனினும், அவற்றுக்கான எரிபொருளை பெறுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என தொழிற்சங்க செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரவில் வங்கிகள் மூடப்பட்டு ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட வேண்டும் என்றாலும், தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அது சவாலாக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளரார்.
இதே நிலை நீடித்தால் மின்சாரம் தடைப்படும் போது இயந்திரங்கள் பழுதடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சில வங்கிகள் இரவு நேரங்களில் இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 2 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
