இலங்கை தென்னை பயிர்ச்செய்கையில் முதல் தடவையாக ஏற்பட்டுள்ள ஆபத்து!பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை
இலங்கையில் தென்னை பயிர்ச்செய்கையில் சுமார் ஒரு வருட காலமாக பரவி வரும் வெண்ணிற ஈ தாக்கத்தின் காரணமாக தெங்கு உற்பத்தி திறன் குறைந்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வெண்ணிற ஈ தாக்க்கம் யாழ்ப்பாணம், களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, கொழும்பு, குருநாகல், கண்டி, காலி,மாத்தறை, ரட்னபுர, புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்ட உள்ளிட்ட மாவட்டங்களில் உறுதி செய்யபட்டுள்ளதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் வெண்ணிற ஈ பரவல்
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளில் தொடர்ந்தும் வெண்ணிற ஈ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகமொன்றிற்கு தெங்கு உடற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,“கடந்த தை மாதம் அளவில் இந்த வெண்ணிற ஈ பரவலை அவதானித்து, தென்னை அபிவிருத்தி திணைக்களத்திற்கு அறிவித்தோம்.
அவர்கள் வருகை தந்து இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இருப்பினும் அவை பலனளிக்கவில்லை.
இது இவ்வாறே தொடர்ந்தால் பெரும் அழிவை ஏற்படுத்தும் அதேவேளை தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு நிலவும்.”என தெரிவித்துள்ளார்.
நான்கு வகையான வெண்ணிற ஈ தாக்கங்கள்
இதுவரை நான்கு வகையான வெண்ணிற ஈ தாக்கங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிலைய பிரதி பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“இலங்கையில் விசேடமாக டெங்கு பயிர் செய்கையில் இந்த நோய் தாக்கம் பதிவாகியுள்ளது.
இதேவேளை இலங்கையில் முதல் தடவையாக இந்த வெண்ணிற ஈ தாக்கம் பதிவாகியுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் இந்த தாக்கம் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது.
2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த தாக்கம் இந்தியாவில் பதிவானது.மேலும் இதனை ரூகோஷ் வெண்ணிற ஈ தாக்கம் என்று கூற முடியும்.
படகு மூலம் தென்னை மரங்கள்
இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அழகான நல்ல பயன் தரக்கூடிய தென்னை மரங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவார்கள்.
அதனை பார்த்து உள்நாட்டு தெங்கு உற்பத்தியாளர்கள் அந்த தென்னை மரங்களை நாட்டிற்கு படகு மூலம் கொண்டு வருவார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போன்று நம் நாட்டில் அந்த தென்னை மரங்கள் வளராது.
எனவே இவ்வாறு கொண்டு வரப்படும் தென்னை மரங்கள் ஊடாகவும் இந்த நோய் தாக்கம் ஏற்படும்."என தெரிவித்துள்ளார்.