அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம்: சர்வதேச நாணய நிதியத்தை நாடும் இலங்கை
அமெரிக்கா,இலங்கையின் மீது விதித்துள்ள 30வீத வரியால் ஏற்படும் பிரதிகூலங்கள் குறித்து, இலங்கையின் அரச அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
அமெரிக்க வரியினால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தே, தாம் சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதிக்கவுள்ளதாக திறைசேரியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வரி விதிப்பு
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தநிலையில் குறித்த வரி விதிப்பினால், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரி வருமான இலக்குகளை அடைவதில் இலங்கைக்கு தடையேற்படலாம்.
எனவே இந்த சூழ்நிலையை சமாளிப்பது தொடர்பிலேயே இலங்கை அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதிக்கவுள்ளதாக திறைசேரியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.