சீரற்ற காலநிலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று மாலை நான்கு மணிவரையான நிலவரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேற்று முதல் பெய்தமழை மற்றும் அதிக காற்று காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் ஜே/40 கிராம சேவகர் பிரிவில் 61 குடும்பங்களைச் சேர்ந்த
221பேரும், ஜே/41 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14பேரும்,
ஜே/42 கிராம சேவகர் பிரிவில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 162பேரும், ஜே/43
கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரும், ஜே/44 கிராம
சேவகர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 60பேரும், ஜே/45 கிராம சேவகர்
பிரிவில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 120பேரும், ஜே/46 கிராம சேவகர் பிரிவில் 3
குடும்பங்களைச் சேர்ந்த 11பேரும், ஜே/47 கிராம சேவகர் பிரிவில் 4
குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் மற்றும் ஜே/48. கிராம சேவகர் பிரிவில் 6
குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடும்பத்தினர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam