நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு
தொடர் மழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை 10 ஆயிரத்து 188 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரத்து 823 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 110 வீடுகள் பகுதியளவிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தற்போது 6 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 96 குடும்பங்களை சேர்ந்த 308 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக திருகோணமலை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதினை தவிர்த்துள்ளதுடன், திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை தொடக்கம் மூதூர் வரைக்குமான மீன்பிடி வள்ளங்கள்,படகுகள் மற்றும் தோணிகள் கடற்கரையோரங்காளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதோடு,மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் திருகோணமலை கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கந்தளாய்,
முள்ளிப்பொத்தானை,தோப்பூர்,தம்பலாகாமம் போன்ற பகுதிகளில் தாழ் நிலப்பகுதிகள்
தொடர்ந்தும் வெள்ள நீரில் மூழ்கி வருகின்றன.
