சீரற்ற காலநிலையின் தாக்கம்: பசறை பிரதேச மக்கள் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக பசறை பிரதேசத்தில் தோட்ட குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதற்கமைய பசறை - டெமேரியா "ஏ" பிரிவு தோட்டத்தில் 34 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கோணக்கலை, லுனுகலை பகுதிகளில் பலத்த காற்று காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மாற்று நடவடிக்கைகள் குறித்து செந்தில் தொண்டமான் மாவட்ட அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகள்
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மாற்று இடங்களில் தங்கவைப்பதுடன் அவர்களுக்கான உலர் உணவுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சேதமடைந்த வீடுகளை சீர்திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும் இப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமையால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பாடசாலையை சீர்திருத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண செயலாளருக்கும் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.


Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam