நாட்டின் எல்லை தொடர்பாக ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க, அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்; கடமையிலிருந்து விலகியிருக்கப்போவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்
ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டில் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது கடமைகளில் இருந்து விலகுவதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்;டில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வு கடமைகள் தொடர்பில் சமூக ஊடகங்கள், ஏனைய ஊடகங்களில்; பொதுமக்களின் கவனமும் கலந்துரையாடலும் இடம்பெற்று வருகின்றது
குறிப்பிட்ட சில முக்கியஸ்தர்கள் அல்லது குழுக்கள் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நாட்டில் பரபரப்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இதனால் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளின் கடமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மையை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை உடனடியாக வகுக்குமாறு ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
