பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்தல்
அண்மையில் வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் கூட்டம் நேற்றைய தினம் (23.09.2023) இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்
அத்துடன் இந்த இரண்டு யோசனைகளையும் தொடர வேண்டாம் என்று அந்த சங்கம், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மேலும், இரண்டு யோசனைகளும் மக்களின் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கின்றன.
அத்துடன் இது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
ஆலோசனையின்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யோசனைகள்
எமது சங்கம் உட்பட்ட சம்பந்தப்பட்டவர்களின் உரிய ஆலோசனையின்றி இரண்டு யோசனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடக அறிக்கையை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |