பதவியேற்புக்காக காத்திருக்கும் ட்ரம்ப்: உலகளாவிய ரீதியில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றவுடன் உலகளாவிய சுகாதார கொள்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார ஸ்தாபனத்திக் இரண்டு நிபுணர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதும் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து பல அமெரிக்க அதிகாரிகள் வெளியேறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனம்
ட்ரம்ப் பதவியேற்ற அன்றைய தினமே அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அவரது ஜனாதிபதி மாற்றகுழுவினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பதவியேற்ற அன்றே அல்லது அடுத்த சில நாட்களில் ட்ரம்ப் அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என நம்பகதன்மை மிக்கவர்கள் தெரிவித்துள்ளனர் என வோசிங்டனின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக பேராசிரியர் லோரன்ஸ் கொஸ்டின் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பினை ட்ரம்ப் நீண்டகாலமாக விமர்சித்து வருகின்ற நிலையிலேயே அமெரிக்காவை அந்த அமைப்பிலிருந்து விலக்கிக்கொள்வதற்கு அவர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |