ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் உடனடி பேச்சுவார்த்தை : அமெரிக்கா அறிவிப்பு
மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் உடனடி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) இதனை நேற்று(19) அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன், இடம்பெற்ற தொலைபேசி உரையாடலுக்கு பின்னர், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் சாத்தியமான அமைதி ஒப்பந்தம்
இந்த தொலைபேசி கலந்துரையாடல் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்ததாக, ட்ரம்ப் தமது சமூக ஊடகப்பதிவில் கூறியுள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) May 19, 2025
அதேநேரம் சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தில் உக்ரைனுடன் இணைந்து பணியாற்ற மொஸ்கோ தயாராக இருப்பதாக புடினும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் சாத்தியமான அமைதி ஒப்பந்தம் ஒன்றை ரஷ்யா முன்மொழியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்க, ரஷ்ய தலைவர்களின் இந்த கருத்துக்கள் தொடர்பில், இன்னும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியிடமிருந்து கருத்துக்கள் எவையும் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த வாரத்தில் போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய ஜனாதிபதியும், உக்ரைன் ஜனாதிபதியும் துருக்கியில் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும், இறுதி நேரத்தில் புடின் அதனை தவிர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
