தமிழ் மக்களின் தன்னம்பிக்கையே முள்ளிவாய்க்கால் கஞ்சி
கடந்த தசாப்தத்தில் பதிவான மிகமோசமானதொரு சம்பவத்தை நினைவுறுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அமைந்துள்ளது என கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சி தெரிவித்துள்ளது.
நெருக்கடிகளிலிருந்து மீளும் தமிழ் மக்களின் தன்னம்பிக்கையின் அடையாளம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் (18) 16 வருடங்கள் பூர்த்தியடைந்தது.
அதன்படி கனடாவில் புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் கனேடிய கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியெவ் சார்பில் அக்கட்சி உறுப்பினர் பார்பரா பால் கலந்துகொண்டார்.
கொன்சவேட்டிவ் கட்சி
தமிழின அழிப்பு நினைவு தின நிகழ்வில் கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியெவ் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றியதையிட்டு பெருமிதம் அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் இனப்படுகொலை இடம்பெற்ற காலப்பகுதியில் அம்மக்களுக்கு கிட்டிய ஒரேயொரு உணவான உப்பு இடப்படாத முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தினோம்.
அது மிகக்கடினமான நெருக்கடிகளிலிருந்து மீளும் தமிழ் மக்களின் தன்னம்பிக்கையையும், மீண்டெழும் தன்மையையும் பிரதிபலிக்கின்றது என்றும் பார்பரா பால் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்ட போராட்டத்துக்கு கனடா தலைமை தாங்குவதை கொன்சவேட்டிவ் கட்சி உறுதிப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri