குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரின் வழக்கறிஞர் விடுத்த எச்சரிக்கை
அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பான வழக்கின் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் விசாரணை அறிக்கைகளை ஜூன் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஆசிரியரின் சட்டத்தரணி, பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்த அவர், பொய்யான குற்றச்சாட்டுக்கள் சமூக ஊடகங்களில் பரப்பபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்...
