மட்டு.மாநகர சபை சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு: உடனடி விசாரணைக்கு கோரிக்கை
மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக சுகாதார தொண்டர் 16 ஆட்சேர்ப்பில் முறைகேடு இடம்பெற்றிருக்கின்றது.எனவே இது தொடர்பாக துரிதமாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஈ.பி.டி.பி. கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டு. மாநகர சபை அமர்வு கடந்த 6ம் திகதி நடைபெற்றது அதில் அதன் உறுப்பினர்கள் தங்களுக்கு தெரியாமல் 16 சுகாதார தொண்டர்கள் புதிதாக வேலைக்கு நியமித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதனை ஊடகங்கள் ஊடாக அவதானிக்க முடிந்தது.எனவே மாநகர சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் சுகாதார தொண்டர் என்ற அடிப்படையில் 16 பேரை நியமித்துள்ளனர்.
நியமனங்கள்
இதில் ஒரு மோசடி நடைபெற்றிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது ஏன் என்றால் உயரிய சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டது.
உண்மையில் ஒரு முறைகேடான விடயமாக கருதுகின்றோம். எனவே இது சம்பந்தமாக துரிதமாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

மாமாங்கத்தை பிறப்பிடமாக கொண்ட ஒருவர் குறித்த வேலைக்கான நேர்முக பரீட்சைக்கு தொற்றியதாகவும் அவர் க.பொ.தர.சாதாரண தர பரீட்சையில் 5 பாடங்கள் சித்தியடைந்துள்ளார் எனவும் அவருக்கு அந்த வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே அவரை விட இந்த 16 பேரும் தகுதியுடையவர்களா அல்லது அதிகார தலையீடு இருக்கின்றதா என ஆளுநர் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
23 மணி நேரமும் சிறை அறையில்..! சிறைச்சாலைகளில் திடீரென வெடித்த கலவரத்திற்கான காரணத்தை வெளியிட்ட அதிகாரி