உடனடியாக ஊரடங்கு விதியுங்கள்! அரசாங்கத்திற்கு அவசர அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் கொரோனாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே நாட்டில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரே வெற்றிகரமான வழிமுறையாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS) அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு அதிகமாக உள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார பிரிவுகளிலும், சுகாதாரத் துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது என சங்கத்தின் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ கூறினார்.
கொரோனா நோயாளிகளுக்கு இடமளிக்கும் திறன் கிட்டத்தட்ட அதன் முக்கிய இடத்தை அடைந்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,




