இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய குழுவின் அறிக்கை
இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம், நாட்டின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பான பொருளாதார விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8% வளர்ச்சியடைந்தது, பணவீக்கம் தணிந்தது, உத்தியோகபூர்வ இருப்புக்கள் 6 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளன.
சர்வதேச நாணய நிதியம்
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் தற்போதைய நிதி முன்னேற்றங்களைப் பாராட்டியது.
எனினும், அதிகரித்து வரும் வெளிப்புற அபாயங்கள் குறித்து எச்சரித்தது. நிலையான மறுசீரமைப்பு முயற்சிகளை, குறிப்பாக வருவாய் உருவாக்கம், கடன் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் கீழ் முக்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மதிப்பாய்வின் பின்னணியில் முறையாக மதிப்பிடப்படும்.
ஐந்தாவது மதிப்பாய்வின் போது அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாமின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
