சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் உடன்பாட்டை எட்டாமைக்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்
அரசியல் ஸ்திரமின்மையே சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், இலங்கையின் அதிகாரிகளுடன் கடந்த வாரம் உடன்பாட்டை எட்டாமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் உறுதியற்ற தன்மையை அவர்கள் மோப்பம் பிடித்த நிலையிலேயே உடன்பாட்டுக்கு அவர்கள் வரவில்லை.
நிலையான அரசாங்கம்
சர்வதேச நாணய நிதியத்தை பொறுத்தவரையில், அவர்களின் திட்டத்தைச் செயல்படுத்த நிலையான அரசாங்கம் இருக்க வேண்டும்.
எனவே நேற்றைய மக்கள் புரட்சியின் பின்னர், பொருளாதார மீட்சிக்கான நீண்ட மற்றும் கடினமான பாதை இப்போதுதான் தொடங்கியுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்தப்போவது யார்?
இந்தநிலையில் அடுத்த வாரத்தில், தற்போதைய அரசாங்கம் வெளியேறும் வாய்ப்புள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது யார்? என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த கேள்விக்கு, பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் சபாநாயகரால் அமைக்கப்படவுள்ள சர்வக்கட்சி அரசாங்கமே பொறுப்பாக இருக்கும்.
எனினும் அந்த அரசாங்கத்தின் மீது, இந்தியா உட்பட்ட வெளிநாட்டு அரசாங்கங்களின்
நம்பிக்கையும், சர்வதேச நாணய நிதிய முன்னெடுப்புக்களில் செல்வாக்கை செலுத்தும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 16 மணி நேரம் முன்

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
