இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு
இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இரவு 10 மணிக்கு சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இச் சந்திப்பு மிக முக்கியமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இரண்டு தரப்பினருக்கும் இடையிலான இறுதிக்கட்ட சந்திப்பாக இருக்கும் என்று ஜனாதிபதி செயலகத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

இந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் பின்னர், இலங்கையின் பிணை எடுப்பு கோரிக்கை தொடர்பில் எடுக்கப்படும் முடிவை சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கும்.
இந்தநிலையில் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இதுவரையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் நாளைய தினம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடப்படும் இறுதி முடிவுகள்

நாளை நண்பகல் வேளையில் அந்த அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் மற்றும் இறுதி முடிவுகளை அறிவிக்கும் உரிமை சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலர் வரை கோரியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 03 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam