சுருங்கும் இலங்கையின் பொருளாதாரம்! பொருளாதார நிபுணரின் பகிரங்க எச்சரிக்கை (Video)
இந்த வருடமும் கூட இலங்கையின் பொருளாதாரம் மூன்று வீதத்தால் சுருங்கப் போகின்றது என பொருளாதார நிபுணர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள கடன் தொகை தொடர்பில் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐஎம்எப் இடமிருந்து பெறப்பட்டுள்ள கடனானது பொருளாதார வளர்ச்சிக்கான தீர்வாக அமையுமா என்பது கேள்வியாகவே இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐஎம்எப் உடனான ஒப்பந்தம் மற்றும் கடன் தொடர்பில் பொதுமக்களிடத்தில் அவர்களது கருத்துக்களை நாங்கள் கேட்கும் போது,
“எதிர்காலத்தில் எங்களது சந்ததியினர் இந்த கடன் சுமையை ஏற்கப் போகின்றார்கள் என தெரியாமல், ஐஎம்எப் இடமிருந்து கடன் கிடைத்தமையை வெடி வெடித்து கொழும்பில் கொண்டாடுகின்றார்கள்” என பொதுமகன் ஒருவர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
முழுமையான விபரங்களை கீழ்வரும் காணொளியில் பார்வையிடுக,
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri