இலங்கையுடன் IMF விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள உடன்பாடு
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) நான்காவது மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாட்டை விரைவில் எட்ட எதிர்பார்க்கிறோம் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இதற்கான IMF ஒப்பந்தங்களை இலங்கை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதன் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசக் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கிய விடயங்கள்
வாராந்திர IMF முடிவு-தகவல் ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மேலும், தொடர்புடைய ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கை நிறைவுக்கு கொண்டு வர வேண்டிய இரண்டு முக்கிய விடயங்களை ஜூலி கோசக் எடுத்துரைத்தார்.
அதேவேளை, செலவு-மீட்பு மின்சார விலை நிர்ணயத்தை மீட்டெடுக்கவும், தானியங்கி மின்சார விலை சரிசெய்தல் பொறிமுறையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்யவும் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக மேலும் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |