தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகும் சட்டமா அதிபர்!
பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை சட்டமா அதிபர் மேற்கொண்டு வருவதாக பிரதி மன்றாடியார் நாயகம் யோஹான் அபேவிக்ரம மாத்தறை நீதவான் அருண புத்ததாசவிடம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு
தேசபந்து தென்னகோன், நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை இறுதியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2025 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று, தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னர், நீதிமன்ற அவமதிப்புக்கு சமமானதாக இருந்த அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இது தொடர்பாக நவடிக்கை எடுக்க தனது நீதிமன்றத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும் நீதிவான் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, தென்னகோனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
