இலங்கைக்கு விரையும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் : சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு ஆரம்பம்
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான மெய்நிகரை் கலந்துரையாடல்கள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
இந்த கலந்துரையாடல்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இலங்கையின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடல்களில் நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த கலந்துரையாடல்களின்போது அவசர நிதி வசதிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளது.

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
