எமது ஆட்சியில் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மறுசீரமைக்கப்படும்: சஜித்
தமது ஆட்சியில் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு மறுசீரமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (13.12.2023) உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படுமா என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மறுசீரமைக்கப்படும் ஒப்பந்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் மறுசீரமைக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது இந்த இணக்கப்பாடு முன்னெடுக்கப்படாது.
மக்களுக்கு சுமைகளை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசாங்கம் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை புதிதாக ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |