சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு பொதி நிதி தொடர்பில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம்
சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு பொதி நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை மேற்பார்வையிட குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்படும் என நிதியமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஒப்புதல்
இந்த குழுவிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப்பொதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பது குறித்த மாதாந்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதை இந்த குழு உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இதுவரை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 16 தடவைகள் நிதி உதவியைப்
பெற்றுள்ளது.
எனினும் இந்த தடவை போன்று நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
