சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியின் முதல் தவணை இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படுகின்றது: இலங்கை மத்திய வங்கி
சர்வதேச நாணய நிதிய நிதி உதவியின் முதல் தவணை 2023ஆம் ஆண்டின் 1வது காலாண்டில் பெறப்படும் என நம்புவதாக மத்திய வங்கி, கோப் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதிக் குழு, சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட மற்றும் மத்திய வங்கியால் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக செயற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள்
எனினும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும், சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் சமூகத்தில் ஏற்படுத்தும் கடுமையான தாக்கங்கள் குறித்து கோப் குழு கவலையை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மீதான தாக்கம் குறித்து மத்திய
வங்கி எச்சரிக்கையாக இருப்பதாகவும், செலவின உச்சவரம்பு போன்ற சில பாதுகாப்பு
உத்திகளை பயன்படுத்தியுள்ளதாகவும் மத்திய வங்கி பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மீண்டும் பதின்மூன்றா....! 18 மணி நேரம் முன்

தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா? Cineulagam

மூக்கு, தாடை எலும்புகள் உடைந்து ஆபத்தான நிலையில் நடிகர் விஜய்ஆண்டனி! தற்போது இவரின் நிலை என்ன? Manithan
