சட்டவிரோத மதுபான விற்பனை நிலையம் முற்றுகை: ஒருவர் கைது (Photos)
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் வெசாக் தினத்தில் விற்பனை செய்வதற்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க மதுபான போத்தல்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அருகில் செல்லும் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே இந்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெசாக் பொசோன் தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதுபான போத்தல்கள் இவ்வாறு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்டுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபேயவிக்ரம கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணையின்
பின்னர் நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என
களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
