பிரித்தானியாவில் கடுமையாகும் சட்டம் - பல தமிழர்களுக்கு அதிர்ச்சி
பிரித்தானியாவுக்கு சிறிய படகில் வரும் அகதிகள் பிரித்தானியா குடிமகனாக மாறுவது சாத்தியமற்றதாக மாற்றும் வகையில் அரசாங்கம் விதிகளை கடுமையாக்கியுள்ளமையானது பல தமிழர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.
அதற்கமைய, இனிமேல் சிறிய படகுகளில் அல்லது லொறிகள் அல்லது வாகனங்களுக்கு மறைந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை மறுக்கப்படும் என உள்துறை அமைச்சின் புதிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு சட்டவிரோதமாக பிரித்தானியா வந்தவர்களுக்கு, அவர்கள் எப்போது வந்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் குடியுரிமை மறுக்கப்படும்.
ஆபத்தான பயணம்
ஆபத்தான பயணம் என்பது, சிறிய படகுகள் அல்லது வாகனத்தில் ஒளிந்திருந்து நுழைவது அல்லது பிற போக்குவரத்து ஊடாக நுழைபவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தும் என்றே கூறப்படுகிறது.
ஆனால் விமான நிறுவனத்தில் பயணிகளாக வருவோருக்கு இது பொருந்தாது என்றே வழிகாட்டுதலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், ஆபத்தான பாதைகளை தெரிவு செய்து பிரித்தானியவுக்குள் நுழைந்த அகதிகள் குடியுரிமை பெறுவதற்கு 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
குடியுரிமை
ஆனால் தற்போது சட்டவிரோதமாக நுழையும் மக்களுக்கு இனி குடியுரிமை மறுக்கப்படும் என்பதை உள்விவகார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இந்த சட்டம் காரணமாக பல தமிழர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

ரூ 100 கோடி சம்பளம்... எதையும் செய்யவில்லை: இந்தியரை வேலையைவிட்டு நீக்கியதன் காரணம் கூறிய மஸ்க் News Lankasri

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
