ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்கள்: ட்ரூடோ எடுத்த அதிரடி முடிவு
ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து உக்ரைனுக்கு 5 பில்லியன் டொலர் பணத்தினை நிதியுதவியாக வழங்க தீர்மானித்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
உக்ரைனில் நடைபெற்ற அமைதி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர், ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து 5 பில்லியன் டொலரினை உதவியாக உக்ரைனுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நிதியுதவி
உக்ரைனில் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது உரையாற்றிய ட்ரூடோ, மேலும் 25 லேசான கவச வாகனங்கள், 2 போர்ப்பாதுகாப்பு வாகனங்கள், F-16 விமானம் பயிற்சி கருவிகள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "உக்ரைன் எந்த விதத்திலும் இந்த போருக்கு காரணம் அல்ல.." என்றும் "இது ரஷ்யாவின் பேரரசை விரிவுபடுத்தும் நோக்கத்தினால் உருவானது" என்றும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்கா உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது ஆபத்தானது என்றும், உக்ரைனே இதை முடிவு செய்ய வேண்டும் என்றும் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் முடிவு குறித்து நடிகர் சதீஷ் போட்ட பதிவு.. என்ன இப்படி சொல்லிட்டாரு Cineulagam
