அதிநவீன வாகனம் சட்டவிரோதமான இறக்குமதி - ரகசியம் கசிந்தமையால் சிக்கிக் கொண்ட அரசியல்வாதி
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஹம்மர் ரக வாகனத்தை கைப்பற்றி அரசாங்க ஏலத்தின் மூலம் மீண்டும் இறக்குமதியாளருக்கே விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
ஹம்மர் ரக வாகனம்
கடந்த பெப்ரவரி மாதம் மூன்று வாகனங்களுடன் ஹம்மர் ரக வாகனம் ஒன்று சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் அரச சொத்துக்களாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஏலம் விடப்பட்டது.
ஹம்மர் வாகனத்தை இறக்குமதி செய்தே நபராலேயே அதனை மீளவும் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.. அந்த வாகனத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படவில்லை. எனினும் அந்த ஹம்மர் வாகனத்தில் விடப்பட்டமை தொடர்பிலான ஏல நடைமுறைகள் குறித்த தெளிவான விவரங்களை சுங்கத் திணைக்களத்தினால் வழங்க முடியாமல் போனதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத விற்பனை
அந்த வாகனத்தின் மதிப்பு 40 மில்லியன் ரூபாய்க்கு அதிகம் என கூறப்பட்ட போதிலும் 27.5 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.. இதனால் 33.75 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் சுங்க சட்டத்திற்கமைய, மொத்த பெறுமதியில் 10 சதவீதத்திற்கு குறையாத விலைக்கு மாத்திரமே விலைமனு கோரல் சபைக்கு விற்பனை செய்ய அனுமதி உண்டு என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள நேரத்தில், இந்த பரிவர்த்தனையின் மூலம் மதிப்பிடப்பட்ட தொகையைப் பெறாதது குறித்து ஆராய்வது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.