சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 800 மில்லியன் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 800 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட் உள்ளிட்ட பொருட்கள் சுங்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, ஒருகொடவத்தையில் உள்ள சுங்கத் திணைக்கள களஞ்சியத்தில் குறித்த பொருட்கள் நேற்றையதினம் (26.09.2024) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களில் 757 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள், 23 மில்லியன் ரூபா பெறுமதியான உழுந்து மா 14 மில்லியன் ரூபா பெறுமதியான மஞ்சள் மற்றும் ஏனைய உதிரிப் பொருட்கள் என்பன உள்ளடங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.
அரசுடைமை ஆக்கப்பட்ட பொருட்கள்
குறித்த பொருட்கள் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டிருந்தால் அரசாங்கம் சுமார் 660 மில்லியன் ரூபா வரி வருமானத்தை இழந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்கியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |