சட்டவிரோதமாக கைப்பற்றிய காணிகள் மற்றும் கட்டடங்கள் அகற்றும் பணி கிண்ணியாவில் ஆரம்பம்
கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் சட்டவிரோத காணிகளையும், கட்டிடங்களையும் அகற்றி அரச உடமையாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்று (03) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் நீதிமன்ற பதிவாளர் மற்றும் அதிகாரிகள் போலீசார் கிண்ணியா பிரதேச செயலாக காணி உஸ்தியோகத்தர்கள் முன்னிலையில் இடம்பெற்றன.
காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை
கிண்ணியா - கச்சக்கொடு தீவு பகுதியில் சட்டவிரோதமாக பெறப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்கள் 1979ஆம் ஆண்டு காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று பதிவாளர் பிஸ்கால் ஓடரை வழங்கி காணி மற்றும் சட்டவிரோத கட்டடங்கள் வெட்கோ இயந்திரம் இட்டு அழிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன.
நீதிமன்ற தீர்ப்பு
சட்டவிரோத காணி மட்டும் கட்டடங்களை வைத்திருந்தவர்கள் இதன்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும் நீதிமன்ற தீர்ப்பின்படி பொலிஸாரின் உதவியுடன் கட்டடங்கள் அகட்டப்பட்டு வருகின்றன.
கட்சக்கொடு தீவில் நீண்ட காலமாக இளைஞர்கள் விளையாடி வந்த மைதானம் ஒன்றும், சட்டவிரோதமாக கைப்பற்றியவரிடம் இருந்து அரசுடைமை ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
