ஹட்டனில் சட்டவிரோதமாக மரப்பலகை கடத்தியவர்கள் கைது- பொலிஸார் தீவிர சோதனை!
சப்பு மற்றும் இலவன் மரப்பலகைகளின் நடுவில் மிகச் சூட்சுமமாக மறைத்து, பல லட்சம் ரூபாய் பெறுமதியான மகோகனி மரப்பலகைகளை ஏற்றி வந்த நபர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (21.03.2026) இடம்பெற்றுள்ளது.
சோதனையில் சிக்கிய மகோகனி மரப்பலகைகள்
கேகாலை பகுதியில் இருந்து ஹட்டன் குடாகம பகுதியில் உள்ள மர ஆலை ஒன்றிற்கு அனுமதியின்றி மோசடியாக மரப்பலகைகள் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த லொறி கண்டறியப்பட்டு சோதனை செய்யப்பட்டதில், அதில் மறைத்து ஏற்றப்பட்டிருந்த மகோகனி மரப்பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை, பிரதீப் வீரசேகர மற்றும் உதவி பொலிஸ் அதிபர் நிஷ்ஷங்க கொடமுல்ல ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுர சுகததாசவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது.
கைது
மேலும், ஹட்டன் பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும், ஹட்டன் வனத்துறை அலுவலக அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், மரக்கட்டைகள் ஏற்றப்பட்ட லொறியும் இன்று (22.03.2026) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri