520 லீட்டர் டீசல் மற்றும் 1220 லீட்டர் பெட்ரோலுடன் மூன்று பேர் கைது
சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்த மேலும் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதுளை பசறை மற்றும் சியம்பலாண்டுவ எதிமலே மற்றும் சபுகஸ்கந்த ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
60 லீட்டர் டீசலுடன் 40 வயதான நபர் நேற்று பசறை பிரதேசத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சபுகஸ்கந்தையில் ஒருவர் கைது

அவர் எதிர்வரும் 30 ஆம் திகதி பசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் பிணையில் விடுவித்துள்ளனர்.
இதனிடையே சபுகஸ்கந்தை இஹல பியன்வில பிரதேசத்தில் 460 லீட்டர் டீசலுடன் 48 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட லீட்டர் பெட்ரோலுடன் கைது செய்யப்பட்ட நபர்

அத்துடன் ஆயிரத்து 220 லீட்டர் பெட்ரோலை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 60 வயதான நபர் நேற்று எதிமலே பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam