கடையொன்றில் பதுக்கப்பட்டிருந்த மூவாயிரம் லீட்டர் டீசல் மீட்பு: பொலிஸார் அதிரடி நடவடிக்கை (Photos)
வவுனியா- வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல கடையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீட்டர் டீசல் விசேட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல்

வவுனியா விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸார் வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல கடையொன்றினை சோதனை செய்தனர்.
இதன்போது குறித்த கடையின் களஞ்சியசாலைப் பகுதியில் 15 பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீட்டர் டீசல் கண்டு பிடிக்கப்பட்டது.
ஒருவர் கைது

இதனையடுத்து குறித்த 15 பெரல்களில் காணப்பட்ட 3000 லீட்டர் டீசல்களும் நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடையின் களஞ்சிய பகுதியில் கடமையாற்றும் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.




கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri