சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு! பொலிஸாருக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
சட்டவிரோதமாக எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் நிபந்தனையின்றி சோதனை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுப்பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கையிருப்பு
மேலும் நாட்டில் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் தேவையான அளவில் எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் தேவையற்ற முறையில் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள பாதகமான சூழ்நிலை காரணமாக, தேவையற்ற முறையில் எரிபொருளை சேகரித்து கையிருப்பில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் எரிபொருள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு பொய்யான தகவல்களைப் பரப்பும் நபர்கள் அல்லது குழுக்கள் குறித்து விசாரணை செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.