முல்லைத்தீவில் யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோத மணல் அகழ்வு

Police Mullaitivu Sand mining
By Kanamirtha Jun 17, 2021 01:07 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்புமாவெளி பகுதியில் யாழ் ஆயர் இல்ல காணியில் சட்டவிரோதமாக இடம்பெறும் பாரிய மணற்கொள்ளை தொடர்பில் அண்மையில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் வெளிக்கொண்டு வந்திருந்தனர்.

குறித்த பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்ட பூர்வ மணல் அகழ்வு காரணமாக அங்குள்ள இயற்கை மண்திட்டுக்கள் அழிவடைந்து செல்வதாகவும், இதனால் எதிர் காலத்தில் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமானால் தாம் பாரிய அளவிலான பாதிப்புக்களைச் சந்திக்க நேரிடும் எனவும், பொதுமக்கள் சுட்டிக் காட்டிய நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியனுடன் செய்தி அறிக்கையிட ஊடகவியலாளர்கள் குறித்த பகுதிக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த இடத்தில் ஒரு பகுதியில் சட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு குறித்த இயற்கை மண்திட்டுக்கள் காணப்படும் பகுதிகளில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றதோடு இன்னொரு பகுதியில் எந்தவித அனுமதியும் இன்றி சுமார் 5000 டிசம்பர் மணல் அகழ்வு செய்து குவிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்டுள்ள மணல் அகழ்வு தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் ஊடகங்களால் முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டு நிலைமைகளைக் காண்பித்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் குறித்த மணலினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு குறித்த இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றம் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைச் செய்தவர்களைக் கைது செய்யுமாறு தெரிவித்தது. ஊடகங்களில் செய்தி வெளிவந்ததன் பின்னணியில் மணல் அகழ்வு தொடர்பில் அனுமதி வழங்கும் அனைத்து திணைக்களங்களையும் 15.06.2021 சம்பவ இடத்திற்கு வருகை தருமாறு மாவட்ட செயலகம் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு 15.06.2021 அன்று வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட காணி உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், குறித்த பகுதி கிராம அலுவலர், புவிச்சரிதவியல் சுரங்கங்கள் அளவைகள் பணியகம், சுற்றச்சுழல் திணைக்களம், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், பொலிஸார் ,விசேட அதிரடிப் படையினர் என அனைத்து திணைக்கள அதிகாரிகளும் குறித்த மணல் அகழ்வு செய்து குவிக்கப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் இடம்பெற்ற மணல் அகழ்வு செய்து குவிக்கப்பட்டுள்ள விடயம் எந்த அனுமதிகளுமின்றி. சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது என்பதை அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மணல் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களையும் அதற்கு பயன்படுத்திய இயந்திரங்கள் போன்றவற்றையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொலிஸாரிடம் அதிகாரிகள் கோரியுள்ளனர் முற்று முழுதாக சட்டவிரோதமாக இடம்பெற்ற செயற்பாடு தொடர்பில் பொலிஸார் இன்றுவரை யாரையும் கைது செய்யாமையானது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு குறித்த பகுதியில் ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்களைக் கருத்தில் கொண்டு இங்கு இடம்பெறும் சட்டபூர்வ, சட்டவிரோத மணல் அகழ்வுகளை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US