கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட பெரியகுளம் கனகராயனாற்றுப் பகுதியில் பல ஏக்கர் காணிகள் பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்போடு சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகராயன் ஆற்றினை அண்டிய பெரிய குளம் பகுதியிலும் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் பல சுமார் 25 அடி ஆழத்துக்கும் மேலாக அதிக அளவில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கியபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணல் அகழ்வு
இவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சு. முரளிதரன் மற்றும் பிரதேச பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாகரன் ஆகியோர் இன்றைய தினம் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு நடவடிக்கைகளுக்காக அறிவுறுத்துவதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
