சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது
சட்டவிரோதமான முறையில் மரக்கறி தோட்டப்பகுதியில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் பொகவந்தலாவ (Bogawantalawa) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரக்கறி தோட்டத்தில் சிலர் பாரிய குழிகள் தோண்டி சுற்றுச்சூழலை நாசம் செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொடை, எல்பிட்டிய மற்றும் அனுராதபுரத்தை வசிப்பிடமாகக் கொண்ட 34-45 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்படும் ஒருவரின் பின்புலத்திலேயே இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் இரத்தினக்கல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
