தென்னிலங்கையில் வெடிப்புச்சம்பவம்: மூவர் வைத்தியசாலையில் அனுமதி
பிலியந்தலை - மாவித்தபுரவில் வீடு ஒன்றில் இயங்கிய சட்டவிரோத பட்டாசு உற்பத்தி நிலையத்தில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (31) காலை ஏற்பட்ட நிலையில், நிலைய உரிமையாளர் மற்றும் அவரது இரு பிள்ளைகள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட தளபாடங்கள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
இந்த வீட்டில் பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளுக்குத் தேவையான ஏனைய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இவ்வருடத்தின் இறுதி நாளான இன்று (31) காலை 7 மணியளவில் பட்டாசுகளை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுத்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |