பொசோன் போயா தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை:பொலிஸார் முற்றுகை
பொசோன் போயா தினத்தில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்யும் நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது இன்று (03.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டாரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொறுப்பதிகாரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் உப பொலிஸ் பரிசோதர்களான சகித் மற்றும் கிருபாகரன் உட்பட பொலிஸ் அதிகாரிகள் புண்ணச்சோலை - மாரபுரம் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மதுபானங்கள்
இதன்போது அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோத முறையில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்து 180 மில்லி லீட்டர் நிறையுடைய 165 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |