சட்டவிரோத மதுபானங்களுக்கான கேள்வி அதிகரிப்பு
நாட்டில் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மதுபான வகைகளுக்கான வரி அதிகரிப்பு காரணமாக விலைகள் உயர்வடைந்துள்ளன.
இதனால் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
விலை அதிகரிப்பு காரணமாக சட்ட ரீதியான மதுபான வகைகளுக்கான கேள்வியும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
வருமான இலக்குகளை அடைவதில் சிரமம்
இதனால் மதுவரித் திணைக்களத்திற்கு வருமான இலக்குகளை அடைவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மதுவரி திணைக்களத்திற்கு அரசாங்கம் 232 பில்லியன் ரூபா என்ற வருமான இலக்கினை வழங்கியுள்ளது.
எனினும் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மதுவரித் திணைக்களத்தின் மொத்த வருமானம் வெறும் 33 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மதுபானம் அருந்திய பலர் விலை அதிகரிப்பு காரணமாக சட்டவிரோத மதுபான வகைகளை நுகரத் தொடங்கியுள்ளதாகவும் சிலர் மதுபான நுகர்வினை கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
