சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை : 4 பேர் தப்பியோட்டம்
மட்டக்களப்பில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களை சுற்றிவளைத்து தடுக்கும் முகமாக சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சித்தாண்டி சந்தனமடு பகுதி அண்மித்த இடங்களில் நேற்று(14.11.2025) சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது.
இதில் சந்தேகத்திற்கு இடமான 4 பேர் தப்பியோடிய நிலையில், 2 பரல்களில் 80 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 2 தகர பரல்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
தப்பியோடிய சந்தேக நபர்கள்
சித்தாண்டி சமூகமட்ட இளைஞர்கள் மற்றும் சந்திவெளி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

குறித்த சுற்றிவளைப்பில் 2 மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய சந்தேக நபர்கள் 4 பேரும் மாவடிவேம்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
தப்பியோடிய நபர்களைத்தேடி பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

