சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
விசுவமடு - மாணிக்கபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்புடன் சந்தேகநபர்கள் இருவரும், சட்டவிரோத தாெழிலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்றையதினம் (02.08.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
திடீர் சோதனை
விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸ் குழுவினர் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
அதன்போது விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் உள்ள கசிப்பு விற்பனை நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு விற்பனைக்காக போத்தலில் வைக்கப்பட்டிருந்த 30 லீட்டர் கசிப்பும், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், கைப்பற்றப்பட்டதோடு அப்பகுதியில் எதுவித ஆவணங்களும் இன்றி இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள்
குறித்த சம்பவத்தில் விசுவமடு ரெட்பானா பகுதியை சேர்ந்த 51, 56 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விசாரணையின் பின்னர் நாளையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









